புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கணக்கெடுப்புக்கு பின் உரிய நிவாரணம் வழங்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கணக்கெடுப்புக்கு பின் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தரங்கம்பாடியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
பொறையாறு,
புரெவி புயல் காரணமாக மயிலாடுதுறை பகுதியில் பெய்த பலத்த மழையால் பொறையாறு, தரங்கம்பாடி, திருக்கடையூர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. நாகை மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரங்கம்பாடி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை
நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். தரங்கம்பாடியில் சேதமடைந்த மீன்பிடித் துறைமுகம் அலைதடுப்பு சுவர், குட்டியாண்டியூரில் கடல்அரிப்பு தடுப்பு சுவர் ஆகியவற்றை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிவாரணம்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் நாளை ஆய்வு மேற்கொள்கிறார். நானும் மற்ற அமைச்சர்களும் நாகை, மயிலாடுதுறை மாவட்டம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். புரெவி புயலால் சேதம் அடைந்த நெற்பயிர்கள், வீடுகள், கால்நடைகளை கணக்கெடுக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்ற பிறகு உரிய நிவாரணம் வழங்கப்படும் இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ சிறப்பு முகாமுக்கு சென்று அங்கு இருந்த நோயாளிகளிடம்நலம்விசாரித்தார். பின்னர் அவர் நல்லாடை பகுதியில் வேளாண் பாதிப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அப்போது நாகைமாவட்ட கண்காணிப்பு அதிகாரி முனியநாதன், மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கம் சிறப்பு அதிகாரி லலிதா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, அ.தி.மு.க மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், எம்.எல்.ஏ.க்கள் பூம்புகார் பவுன்ராஜ், மயிலாடுதுறை ராதாகிருஷ்ணன் சீர்காழி பாரதி, ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story