விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2020 7:39 AM IST (Updated: 8 Dec 2020 7:39 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கான உயர்கல்வி உதவித்தொகையை மத்திய அரசு குறைத்துள்ளதை கண்டித்தும், இந்த உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆற்றலரசு தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர்கள் வக்கீல் செந்தில்குமார், செம்மல், மாவட்ட துணை செயலாளர் இரணியன், பொருளாளர் பிரின்ஸ்சோமு, செய்தி தொடர்பாளர் தமிழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது விழுப்புரத்தில் சாரல் மழை பெய்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தொகுதி செயலாளர்கள் வளவன், பெரியார், விடுதலைச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் அறிவன், ஆசைத்தம்பி, கோவிந்தசாமி, முகிலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Next Story