கோவையில் பிரசார பயணம்: உழவர் சந்தையில் வியாபாரிகளிடம் குறைகளை கேட்ட கனிமொழி எம்.பி.
கோவை உழவர் சந்தையில் வியாபாரிகளை சந்தித்து பேசிய கனிமொழி எம்.பி. அவர்களின் குறைகளை கேட்டறிந்து நலம் விசாரித்தார்.
கோவை,
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரசார பயணத்தை தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று கோவை மாநகரில் தனது பிரசார பயணத்தை மேற்கொண்டார். இதற்காக நேற்று காலை 7.30 மணிக்கு ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைக்கு பிரசார வேனில் வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து, கொடுத்து வரவேற்றனர்.
அதன் பின்னர் அவர் உழவர் சந்தையில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் சென்று வியாபாரிகளை சந்தித்து பேசினார். அப்போது வியாபாரி களிடம் எத்தனை ஆண்டுகளாக கடைகள் வைத்திருக்கிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள், காய்கறிகளை எதில் கொண்டு வருகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு வியாபாரிகள் கொரோனாவால் பஸ்கள் எல்லா இடங்களுக்கும் செல்லாததால் இருசக்கர வாகனங்களில் காய்கறி களை கொண்டு வருவதாக கூறினார்கள்.
கனிவுடன் விசாரித்தார்
அதைத்தொடர்ந்து உழவர் சந்தைகளில் உங்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கிறார்களா?. வியாபாரம் எப்படி நடக்கிறது? உங்களுக்கு ஏதாவது குறை இருக்கிறதா? என்று கேட்ட கனிமொழி அவர்களின் நலன்களை பற்றியும் கனிவுடன் விசாரித்தார். சில வியாபாரிகள் தங்கள் கடைக்கு வாருங்கள் என்று அன்பாக கேட்டுக் கொண்டனர். உடனே கனிமொழி அவர்களின் கடைகளுக்கும் சென்று விசாரித்தார்.
சில கடை வியாபாரிகள் முள்ளங்கி, எலுமிச்சம்பழம் போன்றவற்றை கனிமொழிக்கு கொடுத்தனர். அதை வாங்கிய அவர் அதற்கான பணத்தையும் வியாபாரிகளிடம் கொடுத்தார். மேலும் இளநீர் மற்றும் நீராபானம் கடைகளுக்கு சென்ற கனிமொழி பணம் கொடுத்து இளநீர் மற்றும் நீராபானத்தை கேட்டு வாங்கிக் குடித்தார்.
ஜன்னல் திரைகளை முடைந்தார்
உழவர் சந்தையில் உள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று வியாபாரிகளை சந்தித்து பேசியதோடு மட்டுமல்லாமல் அங்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களையும் அவர் சந்தித்து பேசினார். கனிமொழியுடன் உழவர் சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் செல்பி மற்றும் செல்போனில் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். அதன்பின்னர் அவர் வேனில் ஏறி அங்கிருந்து புறப்பட்டார்.
அதன்பின்னர் காந்திபார்க் அருகில் சாலையோரம் மூங்கில் கூடை பின்னும் தொழிலாளிகளை சந்தித்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மூங்கிலால் தயாரிக்கப்படும் ஜன்னல் திரைகளை முடைந்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் இதை எப்படி செய்கிறீர்கள் என்று ஆர்வத்துடன் கேட்டறிந்து அவரே அதை முடைந்தார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் விருப்பம்
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரசார பயணத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். கோவை பகுதி விவசாயிகளுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால் அவற்றை தீர்க்க தமிழக அரசு முன்வரவில்லை. ரஜினி கட்சி தொடங்கியதும் அது பற்றி கருத்து தெரிவிக்கிறேன். ரஜினி கட்சி தொடங்கினால் தி.மு.க. ஓட்டுகள் பிரியும் என்பது பொய் பிரசாரம். யார் கட்சி தொடங்கினாலும் அது தி.முக.வை பாதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பொள்ளாச்சி சண்முகசுந்தரம் எம்.பி., கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பி.நாச்சிமுத்து, ஆர்.எஸ்.புரம் பகுதி பொறுப்பாளர் கார்த்திக் செல்வராஜ், வக்கீல் மகுடபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஜெயராஜ், ஆர்.எஸ்.புரம் பூபாலன் உள்பட தி.மு.க.வினர் பலர் உடன் இருந்தனர்

Related Tags :
Next Story