சென்னையில் பயணிகள் எண்ணிக்கை குறைவால் மதுரை, அந்தமான் விமானங்கள் ரத்து


சென்னையில் பயணிகள் எண்ணிக்கை குறைவால் மதுரை, அந்தமான் விமானங்கள் ரத்து
x
தினத்தந்தி 9 Dec 2020 3:30 AM IST (Updated: 9 Dec 2020 1:41 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, அந்தமான் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வரவேண்டிய 4 விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை குறைவால் ரத்து செய்யப்பட்டன.

ஆலந்தூர், 

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் தொடா் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் நாடு முழுவதும் நேற்று ‘பாரத் பந்த்’ நடந்தது. தமிழகத்தில் எதிர்க்்கட்சிகள் உள்ளிட்ட சில அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு இருந்தது. விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு நேற்று பணிநேரம் அதிகரிக்கப்பட்டது. அவா்களுக்கு வார விடுமுறை, ஓய்வுநேரம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் பாதுகாப்புக்கு கூடுதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணியமா்த்தப்பட்டனா். விமான நிலைய வளாகத்துக்குள் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருந்தது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. கடந்த சில தினங்களாக ஒரு நாளைக்கு 20 ஆயிரத்தில் இருந்து 22 ஆயிரம் பயணிகள் பயணித்தனா்.

ஆனால் நேற்று சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 103 விமானங்களில் 7,700 பேரும், பிறநகரங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய 103 விமானங்களில் 8,100 பேரும் என 206 விமானங்களில் 15,800 போ் மட்டுமே பயணம் செய்துள்ளனா்.

டெல்லி, திருச்சி, மதுரை, ஐதராபாத், பெங்களூரு, பாட்னா, கடப்பா உள்ளிட்ட விமானங்களிலும் குறைந்த பயணிகளே முன்பதிவு செய்து இருந்தனா். ‘பாரத் பந்த்’ அறிவிப்பு காரணமாக தங்கள் பயணத்தை தவிா்த்து கொண்டதால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் சென்னையில் இருந்து மதுரை, அந்தமான் சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பி வரக்கூடிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Next Story