தென்காசி, சங்கரன்கோவிலில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி,
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்காசி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவர் சங்க மாநில ஆட்சிமன்ற குழு உறுப்பினர் டாக்டர் அப்துல் அஜீஸ் முன்னிலை வகித்தார். குற்றாலம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் பாலாஜி, செயலாளர் டாக்டர் அசருன்னா, புளியங்குடி தலைவர் டாக்டர் குமாரவேல், செங்கோட்டை அரசு டாக்டர் ராஜேஷ் கண்ணா, டாக்டர் சிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை மருத்துவர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். டாக்டர்கள் செந்தில்சேகர், சுப்பாராஜ், போத்திராஜ், நல்லமுத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் ஆனி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story