ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு: அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்து, மாவட்டத்தில் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
அலோபதி டாக்டர்கள் செய்யக்கூடிய அறுவை சிகிச்சையை, ஆயுர்வேத டாக்டர்களும் செய்வதற்கு அனுமதி அளித்ததை கண்டிப்பது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்க மாநில உதவி தலைவர் டாக்டர் கேசவன் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்கத்தின் கடலூர் தலைவர் கோவிந்தராஜன், அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு ஸ்ரீதர், சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் சந்திரன், ராஜேந்திரன், சந்திரலாதன், சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, வழக்கம்போல் பணிக்கு திரும்பினர்.
விருத்தாசலம், திட்டக்குடி
இதே கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம் டாக்டர்கள் சாதிக் பாட்சா, நவநீதம், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் டாக்டர் குலோத்துங்கசோழன், பட்டமேற்படிப்பு மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கம் டாக்டர் சாமிநாதன் மற்றும் டாக்டர்கள் சிவசுப்பிரமணியன், கஸ்தூரி, விஜய், தேவிகா, காந்திமதி, ராஜ்குமார், கரிகாலன், மூவேந்தன், கோவிந்த முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அதேபோல் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அறவழிப் போராட்டம் நடந்தது. இதற்கு தலைமை மருத்துவர் டாக்டர் செல்வேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட டாக்டர்கள், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை முன்பு டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் இளையராஜா தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் ஜெயசெல்வி, தனவேல், மணியன், பாலகுரு, அப்துல்சமது, வரதராஜன் நிவேதிகா உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story