பொது வேலை நிறுத்த போராட்டம்: ஈரோட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை காய்கறி சந்தை மூடப்பட்டது
பொது வேலை நிறுத்த போராட்டத்தால் ஈரோட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. காய்கறி சந்தை மூடப்பட்டது.
ஈரோடு,
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பஞ்சாப் மாநில விவசாயிகள் புதுடெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புதுடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் நாடு முழுவதும் ஒரு நாள் முழு அடைப்பினை பாரத் பந்தாக விவசாயிகள் அறிவித்தனர். அதன்படி நேற்று பொது வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் பரவலாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ஈரோடு தவிர பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், கோபி நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் குறைந்த அளவில் இயங்கின.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை
ஈரோடு மாநகர் பகுதியில் போராட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. குறிப்பாக ஈரோடு மாநகரில் நேற்று குறிப்பிட்ட சங்கத்தினரின் கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருந்தன. பெரு நிறுவன கிளைகள் உள்பட அனைத்து வகை கடைகள், ஷோரூம்கள் திறந்து இருந்தன. கார், மோட்டார் சைக்கிள் ஷோரூம்கள், அனைத்து வகை உதிரி பாகங்கள் விற்பனை கடைகள், மளிகை கடைகள் என்று ஆங்காங்கே ஒரு சில கடைகள் தவிர அனைத்தும் திறந்து இருந்தன. ஓட்டல்களும் ஒரு சிலவற்றை தவிர அனைத்து கடைகளும் இயங்கின. இதனால் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை.
ஈரோடு வ.உ.சி.பூங்கா காய்கறி -பழங்கள் சந்தை நேற்று இயங்கவில்லை. மாலைவரை சந்தை மூடப்பட்டது. வாகனங்கள் வழக்கம்போல ஓடின. வங்கிகள் இயங்கின. அரசு நிகழ்வுகள் தடை இன்றி நடந்தன.
விவசாயிகள் சார்ந்த முக்கிய வணிகக்கூடமான மஞ்சள் வணிக வளாகங்கள் தடை இன்றி இயங்கின.
இதனால் ஈரோடு மாநகர் பகுதி மக்களுக்கு பொது வேலை நிறுத்த போராட்டம் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லாமல் முடிந்தது.

Related Tags :
Next Story