கரூர் காந்திகிராமத்தில் பஞ்சு குடோனில் தீ விபத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்
கரூர் காந்திகிராமத்தில் உள்ள பஞ்சு குடோனில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
கரூர்,
கரூர் காந்திகிராமம் அருகே உள்ள சாய்பாபாநகரை சேர்ந்தவர் நடராஜன். இவர் அப்பகுதியில் சொந்தமாக பஞ்சு குடோன் நடத்தி வருகிறார். இவரது பஞ்சு குடோனில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டு புகைமண்டலமாக காட்சியளித்தது.இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ரூ.4 லட்சம் சேதம்
அதன்பேரில் கரூர் நிலைய அலுவலர் விஜயக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பஞ்சு குடோனில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். இருப்பினும் குடோனில் இருந்த பஞ்சு மூட்டைகள், பஞ்சு உற்பத்தி எந்திரம் தீயில் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
இதன் சேத மதிப்பு ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story