தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு முகமூடி அணிந்து வந்த மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மூங்கில்துறைப்பட்டு அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 3½ பவுன் நகையை பறித்து சென்ற முகமூடி அணிந்து வந்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி வெண்ணிலா (வயது 48). இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கு தூங்கிக்கொண்டிருந்த வெண்ணிலாவின் கழுத்தில் இருந்த 3½ பவுன் நகையை பறித்தனர். இதில் திடுக்கிட்டு எழுந்த வெண்ணிலா திருடன், திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு கதிர்வேல் தூக்கத்தில் இருந்து எழுந்தார். இதைபார்த்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து பிடிக்க முயன்றனர். ஆனால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகினர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரின் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
இதேபோல் மேல்புதூர் பகுதியை சேர்ந்தவர் மாயவன். இவரது மனைவி எல்லம்மாள் (46). இவர் திருப்பூரில் தங்கி கூலி வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் மேல்புதூரில் உள்ள இவரது வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்துள்ளனர். ஆனால் அங்கு பணம், நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றனரா? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இது குறித்தும் வடபொன்பரப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story