சோனியா காந்தி பிறந்தநாள் விழா: காங்கிரஸ் கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
சோனியா காந்தி பிறந்தநாள் விழாவையொட்டி, காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள்.
ஈரோடு,
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவை, காங்கிரஸ் கட்சியினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடினார்கள். அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு வேட்டி -சேலைகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாச்சலம், பொதுச்செயலாளர்கள் சச்சிதானந்தம், வின்சென்ட், சாகுல் அமீது, பச்சையப்பன், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் கே.என்.பாஷா, முகமது அர்சத், நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, எஸ்.சி. பிரிவு தலைவர் சின்னசாமி, சேவா தள தலைவர் ஆறுமுகம், மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி, அங்காளபரமேஸ்வரி மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மணல் மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கி, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார், துணைத்தலைவர் சிவக்குமார், நிர்வாகிகள் பூவை ராஜன், ஆரிப்அலி, ரவி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

Related Tags :
Next Story