ஈரோட்டில் குழந்தையை விலைக்கு வாங்க வந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது
ஈரோட்டில் குழந்தையை விலைக்கு வாங்க வந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் செயல்பட்டு வரும் கிராம சுகாதார அலுவலகத்தில் அகிலா என்பவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அகிலாவுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், ‘தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்றும், குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் உள்ளவர்கள் யாராவது இருந்தால் தகவல் தெரிவிக்கவும் என்றும்’ கூறியுள்ளார்.
மேலும் அவர் சட்ட பிரச்சினை ஏதும் இல்லாத வகையில், வக்கீலுடன் வந்து குழந்தையை பெற்றுக்கொள்வதாகவும் கூறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அகிலா இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கும், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.
விசாரணை
இதைத்தொடர்ந்து போலீசாரின் ஆலோசனைப்படி, அந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய செவிலியர் அகிலா, நீங்கள் கேட்பது போன்று குழந்தை உள்ளதாகவும், வந்தால் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறி உள்ளார். அதனால் குழந்தையை விலைக்கு வாங்குவதற்காக 3 பெண்கள் ஒரு ஆண் என 4 பேர் ஈரோடு கருங்கல்பாளையத்துக்கு வந்தனர்.
அப்போது மறைந்திருந்த போலீசார் அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர்கள், கோவை மாவட்டத்தை சேர்ந்த சங்கரேஸ்வரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோகிலா, மோகன பிரியா, மற்றும் நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தை சேர்ந்த நந்தகுமார் ஆகியோர் என்பது தெரிய வந்தது.
4 பேர் கைது
மேலும் அவர்கள் 4 பேருக்கும் ஏற்கனவே குழந்தைகள் இருப்பதும், அவர்களிடம் ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமிநகர் பகுதியை சேர்ந்த சண்முகப்பிரியா என்பவர் பெண் குழந்தை கேட்டதும் தெரியவந்தது. இதனால் போலீசார் பவானி லட்சுமிநகர் விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த சண்முகப்பிரியா அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். மேலும் போலீசார் அங்கு விசாரித்தபோது, சண்முகப்பிரியாவுக்கு 15 வயதில் பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.
அவர் பிடிபட்டால் தான் குழந்தை யாருக்காக கேட்கப்பட்டது, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்?, இவர்களுக்கும், குழந்தை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட விபரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரேஸ்வரி, கோகிலா, மோகன பிரியா, நந்தகுமார் ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சண்முகப்பிரியாவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story