ஒட்டன்சத்திரம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் 2 கிராமங்கள் துண்டிப்பு
ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது, அரண்மனைபுதூர். இந்த கிராமத்தில் இருந்து பாறையூர், சாலையூர் ஆகிய கிராமங்களுக்கு ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக சாலை செல்கிறது.
ஒட்டன்சத்திரம்,
ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது, அரண்மனைபுதூர். இந்த கிராமத்தில் இருந்து பாறையூர், சாலையூர் ஆகிய கிராமங்களுக்கு ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக சாலை செல்கிறது. இந்த வழியாக தான் அந்த 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அரண்மனைபுதூர் வந்து, அங்கிருந்து ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் பாறையூர், சாலையூர் செல்லும் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த 2 கிராமங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். எந்த வேலைக்கும் செல்ல முடியாமலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட முடியாமலும் தவித்து வருகின்றனர். மாற்றுப்பாதையில் செல்லவும் வழியில்லை. அப்படியே செல்ல வேண்டும் என்றாலும் 10 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். எனவே இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாறையூர், சாலையூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story