ஜெயங்கொண்டம் வட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல்களை நெல் ஆராய்ச்சி நிலைய குழு ஆய்வு


ஜெயங்கொண்டம் வட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல்களை நெல் ஆராய்ச்சி நிலைய குழு ஆய்வு
x
தினத்தந்தி 11 Dec 2020 1:30 AM IST (Updated: 11 Dec 2020 12:14 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் வட்டத்தில் உள்கோட்டை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேற்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் அம்பேத்கர் தலைமையில் இணைப்பேராசிரியர் (உளவியல்) ராஜு, உதவி பேராசிரியர் (பயிர் இனப்பெருக்கம்) சுரேஷ், உதவி பேராசிரியர் (உழவியல்) இளமதி ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

அப்போது இயக்குனர் பேசுகையில், நெற்பயிரில் 1.5 சென்டி மீட்டர் நீர் மட்டும் நிலத்தில் இருக்கும்படியாகவும், அளவுக்கு அதிகமான நீரை வடிகட்டும் படியாகவும், ஆலோசனை கூறினார். மேலும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு கார்பன் டாக்சின் 1.5-2.0 கிராம் என்ற அளவில் கலந்து பயிரின் அடிப்பாகம் நனையும்படி தெளிக்க வேண்டும். இதன் மூலம் தண்ணீரின் மூலமாக பரவக்கூடிய இலை உறை கருகல் நோய் வருவதை தடுக்க முடியும். ஏக்கருக்கு யூரியா 12 கிலோ, பொட்டாஷ் 8 கிலோ என்ற அளவில் வீரியமான சத்தை பெருக்க முடியும். இதன் மூலம் குன்றிப்போன பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் எடுக்க முடியும் என்றார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றனர்.

Next Story