விழுப்புரம், திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரம், திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2020 6:54 AM IST (Updated: 11 Dec 2020 6:54 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும், இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆற்றலரசு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் பிரின்ஸ் சோமு, மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, தொகுதி செயலாளர் பெரியார், நிர்வாகிகள் செம்மல், பாவாணன், வர்மா, வரதன், விடுதலை செல்வன், கோவிந்தசாமி பகலவன், முகிலன் சங்கர், ஆதிதமிழன், வக்கீல் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டிவனம்

திண்டிவனம் வண்டிமேட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் திலீபன், நிர்வாகிகள் தனஞ்செயன், செல்வசீமான், இமயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் எழிலரசன் வரவேற்றார். வள்ளுவன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிந்தனை வேந்தன், இளஞ்சேரன், காமராஜ், வடிவேலு, விஷ்வ தாஸ், சசிகுமார், ஓவியர் பாலு, பிரபுதாஸ், பேந்தர் பழனி, அப்புனு, பால சாக்ரடீஸ், சுதா, தென்னரசு, கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story