கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், புதுடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செந்தில் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் திருமேனி, மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். இதில் நகர செயலாளர் ராஜதுரை, வக்கீல்கள் நாகவேந்தன், புருஷோத்தமன், மாநில நிர்வாகிகள் ஸ்ரீதர், சக்திவேல், முரளி, ஒன்றிய நிர்வாகி சம்பத், கலியபெருமாள், கலியமூர்த்தி, குறிஞ்சிப்பாடி வெங்கடசாமி, மணிகண்டராஜா, நகர துணை செயலாளர் செங்கதிர், ஜெயக்குமார், கார்த்திக், மகி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Related Tags :
Next Story