மீனவர்கள் இத்தாலி கடற்படையினரால் சுடப்பட்டனர்: சர்வதேச தீர்ப்பாய உத்தரவுப்படி நிவாரணம் வழங்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் மனு


கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்
x
கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்
தினத்தந்தி 12 Dec 2020 1:45 AM IST (Updated: 12 Dec 2020 6:17 AM IST)
t-max-icont-min-icon

இத்தாலி கடற்படையினரால் சுடப்பட்ட மீனவர்களுக்கு சர்வதேச தீர்ப்பாய உத்தரவுபடி நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் ஏராளமான மீனவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டம் இரையுமன்துறை மற்றும் பூத்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு கேரள பகுதியில் கடலில் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக சென்ற இத்தாலி கடற்படையினர், மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 2 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நிவாரணம்
இந்த வழக்கு ஐகோர்ட்டில் இருந்து சர்வதேச தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது பலியான மீனவர்களுக்கும், பாதிக்கப்பட்ட சக மீனவர்களுக்கும் இந்திய அரசு, இத்தாலியிடம் இருந்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட சக மீனவர்களுக்கு கேரள மற்றும் தமிழக அரசுகள் எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை. எனவே சர்வதேச தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, துப்பாக்கிச்சூட்டின்போது பாதிக்கப்பட்ட சக மீனவர்களுக்கும் நிவாரணத்தை இந்திய அரசு உடனே பெற்று தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story