மத்திய அரசை கண்டித்து அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்; தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை
மத்திய அரசை கண்டித்து அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை.
ஒருங்கிணைந்த மருத்துவ முறை
நவீன ஆங்கில மருத்துவ முறையும், இந்திய மருத்துவ முறைகளையும் இணைத்து ஒருங்கிணைந்த மருத்துவ முறையை உருவாக்கும் மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து ஏற்கனவே இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அனைத்து மருத்துவ சங்க கூட்டமைப்பு சார்பில் கடந்த 8-ந்தேதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து பெரம் பலூர் மாவட்டத்தில் நேற்று இந்திய மருத்துவ சங்கம், அனைத்து மருத்துவ சங்க கூட்டமைப்பை சேர்ந்த தனி யார் மருத்துவமனைகளின் டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு டாக்டர்கள் மருத்துவ மனைகளில் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை
தனியார் மருத்துவமனை டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சிகிச்சை அளிக் காததால், மாவட்டத்தில் உள்ள 150 தனியார் மருத்துவ மனைகளும் பூட்டப்பட்டிருந் தன. தனியார் மருத்துவமனை களில் அவரச சிகிச்சைகள், அவசர அறுவை சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட் டன.
மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள், 21 ஆரம்ப சுகாதார நிலையங் களில் பணிபுரியும் அரசு டாக்டர்கள் மத்திய அரசை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு செயல் படாததால், அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட் டது.
அரியலூரில்...
இதேபோல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மருத்துவ கொள்கையை ரத்து செய்யக்கோரி அரியலூரில் உள்ள 20-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோ யாளிகள் பிரிவு செயல்பட வில்லை. அரசு மருத்துவமனை களில் டாக்டர்கள், செவிலியர் கள் சட்டையில் கருப்பு பட் டை அணிந்து பணிபுரிந்தனர்.
Related Tags :
Next Story