அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர அனைவரும் பாடுபட வேண்டும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேச்சு
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர அனைவரும் பாடுபட வேண்டும் என்று பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசினார்.
பெத்தநாயக்கன்பாளையம்,
பெத்தநாயக்கன்பாளையத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்தியன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசும் போது கூறியதாவது:-
சமூக ஊடகங்கள் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் வீடு, வீடாக எடுத்து செல்ல வேண்டும். இதற்காக தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். தொழில், விவசாயம் செழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இளம்பெண்கள், இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டு அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பெண்களுக்கு எடுத்து கூற வேண்டும்.
தி.மு.க.வின் ஊழல்களை மக்களுக்கு தெரியும் வகையில் சமூக வலைத்தளங்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர அனைவரும் அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், மோகன், ஆத்தூர் நகர செயலாளர் மோகன், நரசிங்கபுரம் நகர செயலாளர் மணிவண்ணன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர்கள் ரஞ்சித்குமார், சேகர், பெத்தநாயக்கன்பாளையம் நகர செயலாளர் செல்வம், ஏத்தாப்பூர் நகர செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் தங்கமணி, மாவட்ட கவுன்சிலர் கலைச்செல்வி, ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் லிங்கம்மாள் பழனிசாமி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சின்னதம்பி, பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், பெத்தநாயக்கன்பாளையம் கூட்டுறவு வங்கி தலைவர் லோக முருகன், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story