திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 1,077 வழக்குகளுக்கு ரூ.24½ கோடியில் சமரச தீர்வு


திருப்பூரில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
x
திருப்பூரில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
தினத்தந்தி 13 Dec 2020 5:27 AM IST (Updated: 13 Dec 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1, 077 வழக்குகளுக்கு ரூ.24 கோடியே 45 லட்சத்தில் சமரச தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் தாலுகா கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி தலைமை தாங்கினார். மோட்டார் வாகன விபத்து வழக்கு நீதிமன்ற நீதிபதி நாகராஜன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கோவிந்தராஜ், மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி பிரிஷ்னவ், மாஜிஸ்திரேட்டுகள் கவியரசன், உதயசூரியன், வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

1,077 வழக்குகளுக்கு தீர்வு
அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதுபோல் காங்கேயம், அவினாசி, உடுமலை, தாராபுரம் கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 382 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 1, 077 வழக்குகளுக்கு ரூ.24 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 307 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. இதில் சிறு குற்ற வழக்குகள் 494, மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 405 அடங்கும். மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு மட்டும் ரூ.18 கோடியே 12 லட்சம் மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டுள்ளது.

Next Story