மண்ணச்சநல்லூர் பகுதிகளில் புெரவி புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு


மண்ணச்சநல்லூர் பகுதிகளில் புெரவி புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 13 Dec 2020 6:30 AM IST (Updated: 13 Dec 2020 6:30 AM IST)
t-max-icont-min-icon

புெரவி புயலின் காரணமாக மண்ணச்சநல்லூர் பகுதிகளில் உள்ள வயல்களில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சமயபுரம், 

மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் எதுமலை, திருப்பட்டூர், சனமங்கலம் உள்ளிட்ட 16 கிராமங்களில் 3 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தியும், 700 எக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர்.

இந்நிலையில், புெரவிபுயலின் காரணமாக பெய்த மழையால் பருத்தி மற்றும் மக்காச்சோள பயிர்கள் நீரில்மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த வேளாண்இணைஇயக்குனர் பெரியகருப்பன், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து ஆய்வு செய்ய வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதிகாரிகள் ஆய்வு

அதன்பேரில் வேளாண்மை உதவிஇயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சந்திரமோகன் தலைமையில், கே.வி.கே சிறுகமணி உதவி பேராசிரியர் நூர்ஜகான் (வேளாண்மை விரிவாக்கம்), உதவி பேராசிரியர் அலெக்ஸ்ஆல்பர்ட் (விதை நுட்பவியல்) ஆகியோர் மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில், புயலால் பயிர்கள் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து விவசாயிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தனர். 

Next Story