நாகையில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை தாக்கி செல்போன்-பணம் பறிப்பு சிறுவன் உள்பட 3 பேர் கைது
நாகையில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை தாக்கி செல்போன்-பணத்தை பறித்து சென்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
நாகூர் அருகே பூதங்குடியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 50). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து மீன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் அக்கரைப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். நாகை கூக்ஸ் ரோட்டில் சென்றபோது அங்கிருந்த மர்ம நபர்கள் 4 பேர், மோட்டார் சைக்கிளை வழிமறித்து ஆரோக்கியதாசை உருட்டு கட்டையால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2,500 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதில் காயமடைந்த ஆரோக்கியதாஸ் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
3 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியதாசை தாக்கியதாக வெளிப்பாளையத்தை சேர்ந்த ராம்குமார் (28), திருக்குவளையை சேர்ந்த ராஜவேல்(24), 18 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story