வாணியம்பாடியில் வேலைவாய்ப்பு அலுவலகம் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் நிலோபர்கபில் தகவல்


வாணியம்பாடியில் வேலைவாய்ப்பு அலுவலகம் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் நிலோபர்கபில் தகவல்
x
தினத்தந்தி 13 Dec 2020 7:51 PM IST (Updated: 13 Dec 2020 7:51 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

வாணியம்பாடி, 

வாணியம்பாடியில் ரூ.4 கோடியே 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வாணியம்பாடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் நிலோபர்கபில் நிருபர்களிடம் கூறுகையில், “வாணியம்பாடியில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் விரைவில் தொடங்கப்படும்.வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கோணாமேடு சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை சார்பில் சுமார் 1.15 ஏக்கர் பரப்பில் தோல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தோல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து வளையாம்பட்டு பகுதியில் 3.7 ஏக்கர் பரப்பில் ரூ.4.90 கோடி மதிப்பில் கட்டப்படும் வரும் வாணியம்பாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதிக்கான கட்டுமான பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது கலெக்டர் ம.ப.சிவன்அருள், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், மாநில திட்ட மதிப்பீட்டு குழுஉறுப்பினர் செந்தில்குமாா், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சதாசிவம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story