மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்


மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்
x
தினத்தந்தி 14 Dec 2020 5:43 AM IST (Updated: 14 Dec 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெற்றது.

குளித்தலை, 

குளித்தலை நகர மன்றம் கிராமப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது. நேற்று காலை முதல் மாலை வரை நடந்த இந்த முகாமில் புதிய வாக்காளர்கள் பலர் தங்கள் பெயர்களை சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

அதுபோல ஏற்கனவே வாக்காளர் பட்டியல் உள்ள தங்களது பெயர்களை, முகவரிகளையும் திருத்தம் செய்யவும், பலர் விண்ணப்பித்தனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த முகாம்களில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், உள்ளிட்ட பல அரசியல் கட்சியினர் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கவும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை கண்டறிவதிலும் மிகவும் முனைப்பு காட்டி இருந்தனர்.

தோகைமலை

தோைகமலை ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெற்றது. இதில் பாதி்ரிப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் நடந்த முகாமில் பள்ளி தலைமையாசிரியர் மணிமாறன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக கொடுத்தனர்.

நொய்யல்

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், குறுக்குச்சாலை, புன்னம்சத்திரம், தவிட்டுப்பாளையம், நடையனூர், கரைப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள்பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி மாற்றம், முகவரி திருத்தம் குறித்த முகாம் நடைபெற்றது. முகாமில் அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளை சேர்ந்த வாக்காளர்கள் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வடிவத்திலும், இறந்தவர்கள் மற்றும் ஊரை விட்டு வெளியூர்களுக்கு சென்று குடியிருப்பவர்கள் குறித்த பெயர்களை பெயர் பட்டியலில் இருந்து நீக்கல் படிவத்திலும், அதேபோல் முகவரி மாற்றம், முகவரி திருத்தம் குறித்தும் அந்தந்த படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

Next Story