பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் வீடுதோறும் கொண்டு சேர்க்கப்படும் திருச்சியில் நடந்த விழாவில் மோடியின் தம்பி பேச்சு
பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் வீடுதோறும் கொண்டு சேர்க்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடியின் தம்பி பிரகலாத் மோடி கூறினார்.
திருச்சி,
பிரதமர் நநேரந்திரமோடியின் தம்பி பிரகலாத் மோடி. இவர் பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் விளம்பர பிரசார இயக்கம் என்ற அமைப்பின் அகில இந்திய தலைவராக உள்ளார். பிரதமர் நரேந்திர மோடிசெயல்படுத்தி வரும் திட்டங்களை அனைத்து மக்களிடமும் ெ்காண்டு சேர்ப்பது தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
இந்த பிரசார இயக்கத்தின் தொடக்க விழா நேற்று திருச்சியில் நடந்தது. இந்த விழாவிற்கு மாநில தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சி்ன்னதுரை முன்னிலை வகித்தார். இந்த விழாவில் பிரகலாத் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வீடு தோறும் சேர்க்கப்படும்
நமது நாட்டில் ஏழை தாய்மார்கள் விறகு அடுப்பில் சமையல் செய்யும்போது அடையும் சிரமங்களை கண்ட பிரதமர் ேமாடிஇலவச எரிவாயு இணைப்புதிட்டத்தை கொண்டு வந்து ஒரு கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கி இருக்கிறார். மேலும் 8 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட இருக்கிறது. அதே போல் ஏழை மக்கள் வங்கி கணக்கு தொடங்குவதில் உள்ள சிரமங்கள் நீக்கப்பட்டு நாட்டில் 2்2் கோடி பேருக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளது. இது போல் மத்திய அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் வீடு தோறும் கொண்டு சேர்க்கப்படும். இதன் பலனாக அடுத்த மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் பிரகலாத் மோடி விமானத்தில் நேற்று இரவு சென்னை புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story