அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக ரஜினி அரசியலுக்கு வருகிறார் விழுப்புரத்தில் அர்ஜூன்சம்பத் பேட்டி


அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக ரஜினி அரசியலுக்கு வருகிறார் விழுப்புரத்தில் அர்ஜூன்சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 14 Dec 2020 6:36 AM IST (Updated: 14 Dec 2020 6:36 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று விழுப்புரத்தில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன்சம்பத் கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன்சம்பத், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது வரை அரசியல் சூழ்நிலை தி.மு.க., அ.தி.மு.க. என மாறி, மாறி இருந்தது. இனி இந்த நிலை மாறி ஆன்மிக அரசியல் அல்லது திராவிட அரசியல் இரண்டு மட்டுமே இருக்கும். நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியலை நாங்கள் நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம். 234 தொகுதிகளிலும் ரஜினிகாந்துக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் என்ற அற்புதத்தை நிகழ்த்துவோம். அதேநேரத்தில் இந்து மக்கள் கட்சியை ரஜினியின் கட்சியோடு இணைக்கும் எண்ணம் ஏதும் எங்களுக்கு இல்லை.

தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆன்மிக அரசியலை ஏற்படுத்துவோம். ஆன்மிகத்திற்கு மதம் கிடையாது. மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் அனைத்துவிதமான சவுக்கியங்களை கொடுப்பதுதான் ஆன்மிக அரசியல். இதை நடிகர் ரஜினிகாந்த் ஏற்படுத்தி தருவார். வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆன்மிக அரசியல் வெல்லும்.

தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக

டெல்லியில் நல்ல நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களை இந்து மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. இந்த சட்டங்களை தமிழகத்தில் ஆதரித்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தற்போது வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் தி.மு.க., இதே வேளாண் சட்டங்களை ஆட்சிக்கு வந்தால் கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு இப்போது அரசியலுக்காக எதிர்த்து வருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே ஊழல் கட்சிகள்தான். இதில் வேறுபாடு காண முடியாது. இந்த கட்சிகளுக்கு மாற்றாகத்தான் ரஜினி அரசியலுக்கு வருகிறார். ஜனநாயக எஜமானர்களான வாக்காளர்கள், இந்த தேர்தலில் ரஜினிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story