அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாள் விழா: ஏழைகளுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள்
அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏழைகளுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.ஆர். பக்தரட்சகன் வழங்கினார்.
கடலூர்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.வின் பிறந்த நாள் விழா, நேற்று கடலூர் மத்திய மாவட்டம் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.ஆர். பக்தரட்சகன் தலைமையில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சிப்பாடி (வடக்கு) ஜெயக்குமார், பண்ருட்டி(வடக்கு) கலைச்செல்வன், (தெற்கு) கார்த்திகேயன், அண்ணாகிராமம் (கிழக்கு) பெருமாள், நகர செயலாளர்கள் பண்ருட்டி பூக்கடை சக்திவேல், நெய்வேலி நடராஜன், நெல்லிக்குப்பம் அப்துல் ரஷித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு பூஜை
அதன்படி நெய்வேலி வேலுடையான் பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் டி.டி.வி. தினகரன் பெயரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், அண்ணா கிராமம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்லவராயன் நத்தம், பாலூர், காந்திநகர் பகுதிகளில் மாவட்ட செயலாளர் ஏ.பி.ஆர். பக்தரட்சகன் கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கினார். பின்னர், பட்டாம் பாக்கம் , பி.என்.பாளையம் ஊராட்சியில் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருவதிகையில் அம்மா அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.ஆர். பக்தரட்சகன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் புதிய எருசலேம் தேவாலயத்தில் சிறப்பு கூட்டு பிரார்த்தனையும், அங்கிருந்த முதியோர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.
அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
பண்ருட்டியில் நடந்த விழாவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அதை தொடர்ந்து விழமங்களத்தில் இளைஞர்கள் முன்னிலையில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் பண்ருட்டி நகரத்தில் உள்ள படைவீட்டம்மன் கோவில் அருகில், மாற்று கட்சியை சேர்ந்த பலர், அக்கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை மாவட்ட செயலாளர் ஏ.பி.ஆர். பக்தரட்சகன் வரவேற்று, சால்வை வழங்கினார். தொடர்ந்து அங்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அன்னதானம்
நெய்வேலி நகரத்திற்கு உட்பட்ட வட்டம் 21 மற்றும் 30-வது வட்ட பகுதிகளில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றறு. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.ஆர். பக்தரட்சகன் தலைமை தாங்கி, அன்னதானம் வழங்கினார்.
விழாவில் மகளிர் அணி மாநில பொருளாளர் வாசுகி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் மோகன்குமார், மாநில இலக்கிய அணி இணை செயலாளர் வி.மனோகர், மாவட்ட இணை செயலாளர் புவனேஸ்வரி, மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஜெயகாந்தன், மாவட்ட துணை செயலாளர் தேவி, மாவட்ட பொருளாளர் சிற்றரசு, பொது குழு உறுப்பினர்கள் நெய்வேலி தொகுதி வேலாயுதம், பண்ருட்டி தொகுதி கற்பகம் கந்தன், மாவட்ட பேரவை செயலாளர் திருமலை வாசன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜான்சி ராணி, மாணவர் அணி செயலாளர் அகஸ்டின், தொழிற் சங்க பேரவை செயலாளர் குலோத்துங்கன், சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் அப்துல் சலாம், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் நந்தகோபன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அறிவழகன்,, இளைஞர் பாசறை செயலாளர் பழனி வேலு, இளம்பெண் பாசறை செயலாளர் தீபா முருகவேல், தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வி, ஓட்டுநர் அணி செயலாளர் ராஜேஷ், வர்த்தக அணி செயலாளர் பரமகுருநாதன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, சார்பு அணிகள், ஊராட்சி கிளை நிர்வாகிகள் என்று பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story