டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் வழங்கினார்
டி.டி.வி. தினகரன் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் கே.எஸ்.கே. பாலமுருகன் வழங்கினார்.
சேத்தியாத்தோப்பு,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.வின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சேத்தியாத்தோப்பு பூதங்குடி தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் கோவிலில் மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளர், மண்டல பொருளாளருமான கே.எஸ்.கே. பாலமுருகன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அன்னதானம்
அதை தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 57 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி ஆகியவற்றை மாவட்ட செயலாளர் கே.எஸ்.கே. பாலமுருகன் வழங்கினார். தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில விவசாய அணி துணை செயலாளர் சம்பத் என்கிற திருஞானசம்பந்தம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அருண்குமார், மாநில இளைஞர் பாசறை துணை செயலாளர் காசி.மகேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் சீதாராமன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் முல்லை கோவன் வரவேற்றார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கீரப்பாளையம்(கிழக்கு) ராஜவேல், ஸ்ரீமுஷ்ணம் (தெற்கு) அப்பாதுரை, (வடக்கு) செல்வராஜ், புவனகிரி (மேற்கு) வக்கீல் ஜெயச்சந்திரன், (கிழக்கு) அறிவழகன், கம்மாபுரம் (கிழக்கு) கிற கோரி, (மேற்கு) சவுந்தரராஜன், நகர செயலாளர்கள் புவனகிரி சையத் பிலால், சேத்தியாத்தோப்பு பஞ்சநாதன், கங்கைகொண்டான் பாலசுப்புரமணியன், ஸ்ரீமுஷ்ணம் தர்ம கர்ணன், முருகானந்தம், பாலசுப்பிரமணியன், ராமச்சந்திரன், திருப்பால், புவனகிரி காசி, காட்டுமன்னார்கோவில் நாராயணமூர்த்தி, பாலமுருகன், செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story