அரூர் தாலுகா அலுவலகம் முன்பு கொங்கு மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


அரூர் தாலுகா அலுவலகம் முன்பு கொங்கு மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2020 3:14 AM GMT (Updated: 14 Dec 2020 3:14 AM GMT)

அரூர் தாலுகா அலுவலகம் முன்பு கொங்கு மக்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரூர், 

அரூர் தாலுகா அலுவலகம் முன்பு கொங்கு மக்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரேம்குமார், மாணவரணி செயலாளர் அஜித் மற்றும் நிர்வாகிகள், சரத், சதீஷ், அரவிந்தன், மணி, தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாற்று சமூகத்தினர் வேளாளர் என பெயர் மாற்ற கோரும் அரசின் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story
  • chat