புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கரூரில், விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கரூரில், விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2020 5:58 AM IST (Updated: 15 Dec 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர், 

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில்் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த மசோதாவையும் திரும்பப் பெற வலியுறுத்தியும் நேற்று காலை கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

அரசியல் கட்சியினர் ஆதரவு

இதில் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், விவசாய விளைபொருள் வணிகம் மற்றும் வர்த்தகம் ஊக்குவிப்பு சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் ஒப்பந்தம் சட்டம் மற்றும் மின்சார திருத்த சட்ட மசோதா ஆகியவற்றை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று கண்டன உரை எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு விவசாய சங்கம், வாழ்க விவசாய இயக்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் இதில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story