வெள்ளியணை அருகே விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு


வெள்ளியணை அருகே விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 15 Dec 2020 6:00 AM IST (Updated: 15 Dec 2020 6:00 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளியணை அருகே விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என ஜல்லிபட்டி ஊர்பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கரூர்,

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டும் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கரூர் வெள்ளியணை அருகே உள்ள ஜல்லிபட்டி கிராமத்தை சேர்ந்த ஊர்பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டு மைதானம்

பல வருடங்களாகவே விளையாட்டு மைதானம் இன்றி சரிவர விளையாட முடியாத சூழ்நிலையில் உள்ளோம். மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாட கூடிய தகுதி இருந்தும் பயிற்சி எடுப்பதற்கான மைதானம் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் காரணத்தால் விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

புகார் பெட்டி

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டும் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் நாளை கரூருக்கு வருகை தர உள்ளார்.

அதனையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் மனு அளிக்க வரும் பொதுமக்கள் அவதியடையாமல் இருக்கும் வகையில், நேற்று பொதுமக்கள் மனுக்கள் அளிக்கும் புகார் பெட்டி கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலின் அருகிலேயே வைக்கப்பட்டு இருந்தது. இதனால் மனு அளிக்க வந்தவர்கள் நுழைவுவாயிலின் அருகில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.

Next Story