மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினா் ஆா்ப்பாட்டம் திருவாரூாில் நடந்தது


மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினா் ஆா்ப்பாட்டம் திருவாரூாில் நடந்தது
x
தினத்தந்தி 15 Dec 2020 9:35 AM IST (Updated: 15 Dec 2020 9:35 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து திருவாரூாில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூர், 

விவசாயிகளை பாதிக்கும் வகையில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், திருவாரூர் விஜயபுரத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிபாசு, சி.ஐ..டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சலாவுதீன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித், கட்சியின் ஒன்றிய செயலாளர் இடும்பையன், நகர செயலாளர் பாலசுப்ரமணியன், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் கோசிமணி, ஒன்றிய செயலாளர் சுந்தரய்யா உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து ேகாஷங்கள் எழுப்பினா்.

Next Story