கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மனித சங்கிலி போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2020 5:21 AM IST (Updated: 16 Dec 2020 5:21 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரம்பலூர், 

பள்ளர், தேவேந்திர குலத்தான், மூப்பன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தங்களது சமூகத்தின் பெயரை, ‘தேவேந்திர குல வேளாளர்’ என மாற்றி அரசாணையை மத்திய அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். பட்டியலினத்தவர் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் அவர்கள் கருப்பு சட்டை அணிந்து வருகின்றனர். நேற்று 400-வது நாளாக அவர்கள் கருப்பு சட்டை அணிந்தனர்.

மேலும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராமர், செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பங்கேற்றவர்கள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு ரோடு நோக்கி சாலையோரத்தில் வரிசையாக கைப்பிடித்து நின்றனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் த.ம.மு.க. மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் பால்ராசு (வேப்பந்தட்டை), ரமேஷ் (ஆலத்தூர்), ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சூர்யா, இணை செயலாளர் காளியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story