3-வது நாளாக காத்திருப்பு: விவசாயிகள் சங்கத்தினர் மழையில் குடை பிடித்தபடி போராட்டம்
புதுக்கோட்டையில் கடந்த 14-ந் தேதி முதல் விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
புதுக்கோட்டை,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் புதுக்கோட்டையில் கடந்த 14-ந் தேதி முதல் விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். கலெக்டர் அலுவலகம் அருகே பி.எல்.ஏ. ரவுண்டானா பக்கத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. அப்போது மழைபெய்தபோதும், விவசாயிகள் குடைபிடித்தபடி காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் சிலர் மழையில் நனைந்தப்படி அமர்ந்திருந்தனர். மரத்தடியிலும்,, அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்திலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர்கள் சோமையா, ராமையன், ராஜாங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்க செயலாளர் சங்கர், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். இந்த காத்திருப்பு போராட்டம் நேற்றுடன் விலக்கி கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story