டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கரூரில் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
கரூர்,
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த மசோதாவையும் திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த 2 தினங்களாக கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில் 3-வது நாளாக நேற்று கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு விவசாய சங்கங்கள், கட்சிகள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story