திருச்சியில் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் 300 பேர் மீது வழக்கு
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் அருகில் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது.
திருச்சி,
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் அருகில் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்துக்கு தமிழக விசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார். 3-ம் நாள் போராட்டத்தை திருவெறும்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசும்போது, ‘விவசாயிகளுக்காக தி.மு.க. பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. 18-ந் தேதி(நாளை), விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. விவசாயிகளுக்கு தி.மு.க. என்றும் உறுதுணையாக இருக்கும்’ என்றார்.
காத்திருப்பு போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர். கொரோனா காலக்கட்டத்தில் அனுமதியும் இன்றி, போராட்டத்தில் ஈடுபட்டதாக 300 பேர் மீது செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story