கொரடாச்சேரி அருகே பூட்டிக்கிடந்த வீட்டில் தீப்பிடித்தது ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்


கொரடாச்சேரி அருகே பூட்டிக்கிடந்த வீட்டில் தீப்பிடித்தது ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 17 Dec 2020 7:59 AM IST (Updated: 17 Dec 2020 7:59 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே பூட்டிக்கிடந்த வீட்டில் தீப்பிடித்து ரூ.5 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.

கொரடாச்சேரி, 

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அத்திக்கடை கீழத்தெருவை சேர்ந்தவர் இதயத்துல்லா. இவர் குடும்பத்தோடு புருனே நாட்டில் வசித்து வருகிறார். இவர் புருனேவில் இருப்பதால் இவருடைய வீடு கடந்த சில வருடங்களாக பூட்டியே உள்ளது. இவரது உறவினர் அவியல் என்பவர் அத்திக்கடையில் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி வீட்டுக்கு சென்று பார்த்து வருவது வழக்கம். இந்த வீடு பூட்டியே கிடப்பதால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சம் பொருட்கள்

நேற்று முன்தினம் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்க பணிகள் நடைபெற்றது. நேற்று இதயத்துல்லாவின் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதைக்கண்ட உள்ளூர் மக்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அனணத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த ரூ.5லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. தகவல் அறிந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். வீட்டில் சோலார் மின் இணைப்பு உள்ளது. இதற்காக பயன்படுத்தப்படும் பேட்டரியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Next Story