ஜெயங்கொண்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் சார்பில் ஜெயங்கொண்டம் பஸ் நிறுத்தத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் சார்பில் ஜெயங்கொண்டம் பஸ் நிறுத்தத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் போலீசார் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், பஸ் நிறுத்தத்தில் இருந்த பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திருச்சி சரக காவல் துறையின் உதவி எண்கள் 6383071800, 9384501999 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. முடிவில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story