மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க புதிய வியூகம் துணை முதல்-மந்திரி அஜித்பவார் அறிவித்தார்
மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க புதிய வியூகத்தை துணை முதல்-மந்திரி அஜித்பவார் அறிவித்தார்.
மும்பை,
ஜன்சுராஜ்ய கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் அதில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் இணைந்தார். அவரை துணை முதல்-மந்திரி அஜித்பவார் மற்றும் மாநில தலைவரும், மந்திரியுமான ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் கட்சிக்கு வரவேற்றனர்.
அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை தங்களது மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு இழுக்க அஜித்பவார் புதிய வியூகத்தை அறிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-
பா.ஜனதாவில் இருந்து விலகி எம்.எல்.ஏ.க்கள் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள எந்த கட்சியில் சேர்ந்தாலும், அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் போது அவர்களுக்கு மகாவிகாஸ் கூட்டணியில் உள்ள 3 கட்சிகளும் ஆதரவு அளிக்கும்.
எனவே அவர்கள் தேர்தலில் எளிதில் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
10 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி மந்திரி ஜெயந்த் பாட்டீல் பேசியதாவது:-
10-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அவர்களது கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர். கட்சியின் செயல்பாடுகளால் அவர்கள் விரக்தியில் உள்ளனர். அவர்கள் எங்களிடம் பல முறை வெளிப்படையாக பேசினர். எனினும் அவர்கள் பற்றி வரும்காலத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story