நியாய விலைக்கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு கரூரில் நடந்தது
கரூர் அரசு கலைக் கல்லூரியில் நேர்முகத்தேர்வு தொடங்கியது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் நேர்முக தேர்வு நடைபெற்றது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நியாயவிலைக்கடைகளில் 53 விற்பனையாளர்கள் மற்றும் 2 கட்டுனர் பணியிடங்களுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்காக சுமார் 7,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனையடுத்து விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று முன்தினம் கரூர் அரசு கலைக் கல்லூரியில் நேர்முகத்தேர்வு தொடங்கியது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் நேர்முக தேர்வு நடைபெற்றது. இந்த நேர்முகத்தேர்விற்கு வந்தவர்களுக்கு முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டது. மேலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்து, சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். பின்னர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, நேர்முகத் தேர்வு செய்யப்பட்டது. இந்த நேர்முக தேர்வு வருகிற 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story