காவிரி டெல்டாவில் மீண்டும் கனமழை கொரடாச்சேரியில் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை
காவிரி டெல்டாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கொரடாச்சேரி,
திருவாரூர் மாவட்டத்தில் நிவர் மற்றும் புெரவி புயலால் பெய்த பலத்த மழையால் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. மழையால் வயல்களில் தேங்கிய தண்ணீரை விவசாயிகள் வடியவைத்து வருகின்றனர். ஆறு மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் முழுமையாக செல்வதால் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிய தாமதமானது. இந்த நீர் முற்றிலுமாக வடிவதற்குள் தற்போது காவிரி டெல்டாவில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் மீண்டும் வயல்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. வயல்களை மூழ்கடிக்கும் அளவுக்கு மழை இல்லை என்றாலும் உயரமாக வளர்ந்த பயிர்கள் மழைநீரில் சிக்கி சாய்ந்து வருகின்றன.
நிவாரணம்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்பள்ளிமுக்கூடல், வண்டாம்பாளை, பெரும்புகழூர் உள்ளிட்ட இடங்களில் நெற் பயிர்கள் சாய்ந்துள்ளது. இதனால் சாகுபடி பாதிப்படையும். நிவர் மற்றும் புெரவி புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அத்துடன் இந்த பயிர்களையும் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமக்கோட்டை
திருமக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது.
இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதிகளில் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. .கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, ஓவர்ச்சேரி, பொதக்குடி, பூதமங்கலம், பூந்தாழங்குடி, புனவாசல், கிளியனூர், மரக்கடை, கோரையாறு, அதங்குடி, வேளுக்குடி, சித்தனங்குடி, கோம்பூர், நாகங்குடி, பழையனூர், சாத்தனூர், வடகட்டளை, கானூர், மங்களாபுரம், வடபாதிமங்கலம், பாண்டுகுடி, பாரதிமூலங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும், வயல்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. இைதப்ேபால மன்னாா்குடி பகுதியில் பரவலாக மழை பெய்தது.
Related Tags :
Next Story