திருப்பூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
திருப்பூரில் உள்ள தலைமை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று காலை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்,
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சேவைகள் பறிபோவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிர்வாகத்தை கண்டித்தும், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், திருப்பூரில் உள்ள தலைமை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று காலை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் நடந்த இந்த போராட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முஹம்மது ஜாபர், தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில அமைப்பு செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
ஓராண்டுக்கு மேலாக வழங்கப்படாத ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளத்தை உடனே வழங்கவேண்டும். பணிநீக்கம் செய்தவர்களை மீண்டும் பணிக்கு எடுக்கவேண்டும். பி.எஸ்.என்.எல். சேவையை விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இந்த போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் விஸ்வநாதன், செயலாளர் ராமசாமி, உதவி தலைவர் காந்தி, பொருளாளர் கல்யாணராமன், மாநில உதவி செயலாளர் சுப்பிரமணி, தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில உதவி செயலாளர் முத்துக்குமார், ஓய்வூதியர் சங்க மாநில உதவி தலைவர் சவுந்திரபாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் கிளை செயலாளர் குமரவேல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story