மராட்டியத்தில் இருந்து வாக்குப்பதிவுக்கான எந்திரங்கள் தஞ்சைக்கு வந்தன கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டார்


மராட்டியத்தில் இருந்து வாக்குப்பதிவுக்கான எந்திரங்கள் தஞ்சைக்கு வந்தன கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 20 Dec 2020 8:27 AM IST (Updated: 20 Dec 2020 8:27 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இருந்து வாக்குப்பதிவுக்கான 1,680 எந்திரங்கள் தஞ்சைக்கு வந்தன. இதனை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் எந்திரம் ஆகியவை சரிபார்க்கும் பணி தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 15-ந்தேதி முதல் நடந்து வருகிறது.

தினமும் 300 எந்திரங்கள் வீதம் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூருவில் இருந்து பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் இருந்து வந்த 9 பணியாளர்கள் சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

1680 எந்திரங்கள் வந்தன

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தஞ்சை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்திரங்கள் மராட்டியத்தில் இருந்து வருகிறது. அதன்படி நேற்று முதல் கட்டமாக யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் 1,680 எந்திரங்கள் நேற்று வந்தன. இந்த எந்திரங்கள் தஞ்சை வருவாய் கோட்ட அலுவலக முதல் தளத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் அனைத்து அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது.

மேலும் கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவுக்கான எந்திரங்கள் இன்னும் ஓரிருநாளில் வர உள்ளது. இந்த நிலையில் சரிபார்க்கும் பணி நடைபெறுவதையும், மராட்டியத்தில் இருந்து வந்த எந்திரங்களையும் கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டார்.

சரிபார்ப்பு பணி

பின்னர் கலெக்டர் கோவிந்தராவ் கூறுகையில், முதல் கட்ட சரிபார்ப்பு பணி அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் சரிபார்ப்பு முடியும் வரை தொடர்ந்து நடைபெறும்’’என்றார்.

அப்போது வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி உடன் இருந்தார்.

Next Story