துப்புரவு பெண் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தாராபுரம் நகராட்சி துப்புரவு பெண் தொழிலாளி உடல் நலக்குறைவு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் மூலனூர் போலீஸ் சரகத்திற்கு உற்பட்ட கருங்காளி வலசு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்.
இவரது மனைவி அஜிதா (வயது 34). இவர் தாராபுரம் நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணயாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்தது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அஜிதா நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மூலனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அஜிதா தாராபுரம் நகராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் 4 ஆண்டாக ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அஜிதா உள்பட 17 பேரை பணியில் இருந்து நகராட்சி நிர்வாகம் 12-ந் தேதி நீக்கியது. இதனால் அஜிதா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் வேலையில் இருந்து அஜிதாவைு நீக்கியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், எனவே அவருடைய குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் என்.கனகராஜ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பொன்னுசாமி கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story