ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா; 23-ந் தேதி தொடக்கம்
தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் 1956-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி இயறறப்பட்டது. இதனை நினைவு கூரும் வகையில் ஆட்சிமொழி சட்ட வார விழா வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) முதல் 29-ந் ேததி வரை கடைபிடிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் 7 நாட்களும் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பெயர் பலகைகள் 5:3 என்ற விகிதாசாரத்தின் அடிப்படையிலும், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலானவற்றில் 5:3:2 என்ற விகிதாசாரத்தில் அடிப்படையில் அமைய அரசாணை பிறப்பிக்கப்படுகிறது இது குறித்து துண்டறிக்கைகள் வழங்கியும், தமிழ் மொழி விழிப்புணர்வு குறித்த ஒட்டு வில்லைகள், பதாகைகள் அரசு அலுவலங்களில் இடம் பெறவும் தமிழில் அமையாத பிற வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை உடன் தமிழ் மொழியில் மாற்றி அமைத்து தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விழாவில் அரசு அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மாணவர்கள் மற்றும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை மாணவர்கள் ஆகியோரைக் கொண்டு சமூக இடைவெளியுடன் 7 நாட்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. விழாவில் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொள்ளும்படி கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story