திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மாதங்களுக்கு பின்னர் ஜமுனாமரத்தூர் பீமன் நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி


ஜமுனாமரத்தூர் பீமன் நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி
x
ஜமுனாமரத்தூர் பீமன் நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி
தினத்தந்தி 20 Dec 2020 12:00 PM IST (Updated: 20 Dec 2020 12:00 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஜமுனாமரத்தூர் மலை கிராமம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கோடை விழா மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படும்.

மேலும் அந்த பகுதியில் பீமன் நீர்வீழ்ச்சி, சுற்றுச்சூழல் பூங்கா, கோலப்பன் ஏரி போன்றவை உள்ளது. கோலப்பன் ஏரியில் நடைபெறும் படகு சவாரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமின்றி விேசஷ நாட்களில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இதனை பார்வையிட வருவார்கள்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் பயன்பெற்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட கோலப்பன் ஏரியில் படகு சவாரி கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தற்போது ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கு யாரும் ஒன்றுகூட கூடாது என்பதற்காக அங்கு செல்லும் பாதை வனத்துறையினர் மூலம் மூடப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பட்டு வந்தது. இந்த நிலையில் பீமன் நீர் வீழ்ச்சிக்கு ெபாதுமக்கள் செல்ல அரசு அனுமதித்ததன் பேரில் மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் வழிகாட்டுதலின்படி 8 மாதங்களாக மூடப்பட்டு இருந்த பீமன் நீர்வீழ்ச்சி செல்லும் பாதையினை ஜமுனாமரத்தூர் வனச் சரக அலுவலர் குணசேகரன் பூஜை செய்து திறந்து வைத்தார்.

அப்போது வனவர்கள், வனக்காப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Next Story