பெரம்பலூரில் கிறிஸ்துமஸ் ‘ஸ்டார்’கள் விற்பனை அமோகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் கடைகளில் ‘ஸ்டார்’களின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
பெரம்பலூர்,
உலகம் முழுவதும் வருகிற 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படவுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூரில் விதவிதமான ‘ஸ்டார்’கள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பரிசு பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், போஸ்ட் ஆபீஸ் தெரு, பள்ளிவாசல் தெரு, காமராஜர் வளைவு, ரோவர் ஆர்ச் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புத்தக கடைகள், அழகுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் கிறிஸ்துமஸ் ‘ஸ்டார்’கள், கிறிஸ்துமஸ் மரம், குடில் செட்டுகள், கிறிஸ்துமஸ் தாத்தா உடை, வண்ண விளக்குகள் மற்றும் பரிசு பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. விதவிதமான ‘ஸ்டார்’களை கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் அவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
ஸ்டார், குடில், மரம்
மேலும் கிறிஸ்தவ ஆலயங்கள், வீடுகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண மின்விளக்குகளுடன் ‘ஸ்டார்’களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் விதவிதமான ‘ஸ்டார்’கள் தயாரிக்கப்படுகிறது. அங்கிருந்து ‘ஸ்டார்’கள், குடில்களை மொத்தமாக பெரம்பலூர் வியாபாரிகள் கொள்முதல் செய்து கடைகளில் வைத்து விற்பனை செய்து வருகிறோம். கிறிஸ்துமஸ்சுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் ‘ஸ்டார்’, குடில், பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகளின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
ஸ்டார்கள் ரூ.30 முதல் ரூ.550 வரை விற்கப்படுகிறது. இதேபோல் எல்.இ.டி. பல்புகளுடன் கூடிய ஸ்டார்கள் ரூ.450 முதல் விற்பனை செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸ் மரம், அதன் தரத்தின்படி ரூ.80 முதல் ரூ.850 வரையிலும் விற்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் குடில் ரூ.250 முதல் 450 வரை விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான கிறிஸ்துமஸ் தாத்தா உடை விற்பனைக்கு உள்ளது, என்றார்.

Related Tags :
Next Story