அரக்கோணம் ஜெய்பீம்நகர் அருகே பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் பாதிப்பு


அரக்கோணம் ஜெய்பீம்நகர் அருகே பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் பாதிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2020 9:04 AM IST (Updated: 21 Dec 2020 9:04 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் ஜெய்பீம் நகர் அருகில் திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள பாதாள சாக்கடையின் ‘மேன்வோல்’ வழியாக கழிவுநீர் பல வாரங்களாக வெளியேறி வருகிறது.

அரக்கோணம்,

அரக்கோணம் ஜெய்பீம் நகர் அருகில் திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள பாதாள சாக்கடையின் ‘மேன்வோல்’ வழியாக கழிவுநீர் பல வாரங்களாக வெளியேறி வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் சாலையோரம் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. அந்த இடத்தில் வாகனங்கள் சிக்காமல் இருக்க தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதே நெடுஞ்சாலையில் பல இடங்களில் பாதாள சாக்கடையின் மேன்வோல்கள் சாலை மட்டத்துக்கு இல்லாமல் சற்று பள்ளமாக உள்ளது. இதனால் இரவில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்கப்படுமா? எனப் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story