மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2020 9:41 AM IST (Updated: 21 Dec 2020 9:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மூசா, துணை செயலாளர்கள் காயல் மைதீன், முத்துக்குமார், செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜாஹீர் வரவேற்று பேசினார்.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்சியின் இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாய், மாநில துணை செயலாளர் சாகுல் ஹமீது, தமிழக வாழ்வுரிமை கட்சி அய்யாவழி பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், உலமாக்கள் அணி மாவட்ட செயலாளர் உசேன் அல்தாபி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story