மகளிர் அணி நிர்வாகிகள் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி அ.தி.மு.க. வெற்றிக்கு உழைக்க வேண்டும் அமைச்சர் பேச்சு
மகளிர் அணி நிர்வாகிகள் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச்சொல்லி அ.தி.மு.க. வெற்றிக்கு தீவிரமாக உழைக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
சிவகிரி,
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பாக சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அ.தி.மு.க மகளிர் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளரும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மனோகரன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா முன்னிலை வகித்தார். வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.மூர்த்தி பாண்டியன் வரவேற்று பேசினார். தென்காசி வடக்கு மாவட்ட கழக மண்டல பொறுப்பாளரும் மற்றும் செய்தி- விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த் ஆகியோர் பேசினர்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ
விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லாசியுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அனைத்து துறைகளிலும் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் பெற்று வருகிறது. ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ததால் மக்கள் அனைவரும் அ.தி.மு.க. பக்கமே உள்ளனர். தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து இருப்பதால் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள். தென்காசி வடக்கு மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு செய்துள்ள நலத்திட்டங்களை சொல்லி வாக்குகள் கேட்டு வருகிறோம். அ.தி.மு.க. சாதனைகளை சொல்லி தேர்தலை சந்திக்கிறது. மகளிர் அணி நிர்வாகிகள் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு தீவிரமாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் ராஜலட்சுமி
அமைச்சர் ராஜலட்சுமி பேசியதாவது:-
இந்தியாவிலேயே மகளிருக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா ஆவார். அவர் விட்டுச்சென்ற பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெண்களுக்காக எண்ணற்ற புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திருமண நிதி உதவி, கர்ப்பிணி பெண்களுக்கான நிதி உதவி, இரு பெண் குழந்தைகள் திட்டம், பணிபுரியும் பெண்களுக்கான ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி மீண்டும் அமோக வெற்றி பெற பாடுபட வேண்டும். மூன்றாவது முறையாக தமிழகத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன், புளியங்குடி நகர செயலாளர் பரமேஸ்வர பாண்டியன், வாசுதேவநல்லூர் நகர செயலாளர் சீமான் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அச்சன்புதூர்
இதேபோல் கடையநல்லூர் அருகே அச்சன்புதூரில் அ.தி.மு.க. சார்பில் மகளிர் குழு ஆலோசனை கூட்டத்திலும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் கடையநல்லூர் நகர செயலாளர் எம்.கே.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story