காரியாபட்டியில் அம்மா மினி கிளினிக் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்
காரியாபட்டியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
காரியாபட்டி,
தமிழக அரசு திருச்சுழி தொகுதி, காரியாபட்டி ஒன்றியம், ஆவியூர் கிராமம், நரிக்குடி ஒன்றியம் இலுப்பையூர் ஆகிய கிராமங்களில் மினி கிளினிக் அமைக்க உத்தரவிட்டது. அதன்படி இந்த பகுதிகளில் மினி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் கண்ணன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு சுகாதார சேவைகளை செய்து வருகிறது.
பின் தங்கிய பகுதி
ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத கிராமங்களில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய பகுதியான நரிக்குடி ஒன்றியத்தில் இலுப்பையூர், காரியாபட்டி ஒன்றியம் ஆவியூரில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆவியூர் கிராமம் அதிக மக்கள் தொகை கொண்ட கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் எந்தவித மருத்துவ வசதியும் இல்லாததால் இதை தேர்வு செய்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
அதேபோல் நரிக்குடி ஒன்றியம் இலுப்பையூர் கிராமத்தின் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிக கிராமங்கள் உள்ளதால் அந்த கிராமத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயா பெருமாள், காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், தோப்பூர் முருகன், நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அம்மன் பட்டி ரவிச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பிரபாத் வர்மன், மாவட்ட அம்மா பேரவைசெயலாளர் மச்சேஸ்வரன், நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், முனியாண்டி, சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் சித்திக், மாவட்ட பொருளாளர் குருசாமி, அருப்புக்கோட்டை நகர செயலாளர் சக்திவேல் பாண்டியன், மாவட்ட மாணவரணி செயலாளர் வேங்கைமார்பன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் பாலமுருகன், நரிக்குடி யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் பால்சாமி, மாவட்ட அமைப்பு சாரா அணி இணைச்செயலாளர் ஆவியூர் ரவி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அம்மன்பட்டி சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு கவுதம் ராஜா, முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஆதிமூலம், பந்தனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆவியூர் கிருஷ்ணன், காரியாபட்டி மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் குண்டுகுமார், ஒன்றிய கவுன்சிலர் சந்திரன், நரிக்குடி ஒன்றிய பேரவை செயலாளர்கள் தியாகராஜன், ஒட்டங்குளம் வீரபாண்டி, நல்லுகுறிச்சி ஊராட்சிமன்ற தலைவர் அந்தமான் கர்ணன், பட்டமங்கலம் கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன், திருச்சுழி தெற்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் நடராஜன், திருச்சுழி வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சுந்தர்ராஜன், திருச்சுழி முன்னாள் ஊராட்சி செயலாளர் வேல்பாண்டி, நரிக்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் வீர மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞான பாண்டி, ஆதி ஈஸ்வரன், கார்த்திக், சிவகுமார், நரிக்குடி ஒன்றிய துணை செயலாளர் தவமுத்து, நரிக்குடி ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஜெயச்சந்திரன், நரிக்குடி தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story